Posts

அரிய தியான நுட்பம்

 ஓஷோ ஜென் ஞான கதை  சீடன் மற்றும் குரு மூன்று வருடங்கள் ஆகிவிட்டது, இன்னமும் தியானம் கற்றுத் தரவில்லையே என்று கேட்டான் சீடன். ஜென்குரு, இன்றில் இருந்து உனக்கு நான் தியானத்தை சொல்லித் தருகிறேன். என்றார். அவர் மிகவும் வேறுபட்ட வித்தியாசமான வழியில் கற்றுத் தர ஆரம்பித்தார். அந்த இளைஞன் புத்தமத நூல்களை படித்துக் கொணடிருக்கும்போது பின்புறமாக வந்து மரக்கத்தியினால் மிக பலமாக அவனை தாக்கினார். அவர் மிகவும் அமைதியான மனிதர். அவருடைய காலடி ஒசையை கூட அவனால் கேட்க முடியாது. திடீரென, எங்கிருந்தோ அந்த மரக்கத்தி அவன் மீது விழும் . நீங்கள் ஏன் என்னை தொடர்ந்து அடித்துக் கொண்டே இருக்கிறீர்கள். எனக் கேட்டான். குரு இதுதான் நான் கற்றுக்கொடுக்கும் முறை. "கவனமாயிரு, உணர்வோடு இரு." அப்போது நான் உன்னை அடிப்பதற்கு முன் நீ நகர்ந்துகொள்ளலாம். அதுதான் ஒரே வழி என்றார். தப்பிக்க வேறு வழியில்லை. அந்த இளைஞன் கவனமாக இருக்க ஆரம்பித்தான். அவன் புத்தமத நூல்களை படித்துக் கொண்டிருந்தாலும் சுதாரிப்பாக கவனமாக இருந்தான். மெதுமெதுவாக இரண்டு மூன்று வாரங்களுக்குள்ளாகவே அவன் குருவின் காலடி ஒசையை கேட்க ஆரம்பித்தான். மூன்று மா...